Advertisement

பாலிஸ்டிக் ரக ஏவுகணையை ஈரான் பரிசோதித்தது

By: Nagaraj Thu, 25 May 2023 11:14:37 PM

பாலிஸ்டிக் ரக ஏவுகணையை ஈரான் பரிசோதித்தது

ஈரான்: பாலிஸ்டிக் ரக ஏவுகணை... 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட பாலிஸ்டிக் ரக ஏவுகணையை ஈரான் பரிசோதித்துள்ளது.

கெய்பர் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை, ரேடார் சாதனங்கள் மற்றும் பிற பாதுகாப்பு தளவாடங்களின் பார்வையில் படாமல் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதென்று ஈரான் பாதுகாப்பு அமைச்சர் முகம்மது ரெஜா கரே அஸ்டியானி தெரிவித்துள்ளார்.

strike capability,iran,explosives,missile ,தாக்கும் திறன், ஈரான், வெடி பொருட்கள், ஏவுகணை

Khoramshahr 4 ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவமே கெய்பர் ஏவுகணை என்றும், அது ஆயிரத்து 500 கிலோ வெடிப் பொருள்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டதென்றும் ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

Tags :
|