Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரயில் பயணிகளுக்கு IRCTC முக்கிய எச்சரிக்கை..இந்த அழைப்புகளை நம்ப வேண்டாம்..

ரயில் பயணிகளுக்கு IRCTC முக்கிய எச்சரிக்கை..இந்த அழைப்புகளை நம்ப வேண்டாம்..

By: Monisha Wed, 20 July 2022 7:45:52 PM

ரயில் பயணிகளுக்கு IRCTC முக்கிய எச்சரிக்கை..இந்த அழைப்புகளை நம்ப வேண்டாம்..

இந்தியா: IRCTC யின் பணத்தைத் திரும்ப பெறுவதற்கான நடைமுறையின் போது உங்களுக்கு வரும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து தரப்பட்ட மக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுவதில் முக்கியப்பங்கு வகிப்பது ரயில் சேவை தான். லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்திவரும் நிலையில், அவ்வப்போது புதிய அறிவிப்புகள் மற்றும் சலுகைகளை இந்திய ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.


குறிப்பாக ஏதோ ஒரு காரணத்திற்காக ரயில் டிக்கெட்டை நாம் ரத்து செய்திருந்தாலோ? அல்லது ரயில்வே நிர்வாகம் ரத்து செய்திருந்தாலோ? பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு (IRCTC ipay Refund) நாம் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.ஆனால் ரயில்வே நிர்வாகம் தற்போது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான புதிய சேவையை வழங்கியுள்ளது.


இதன்படி, IRCTC ipay ஆப் மூலம் முன்பதிவு செய்வதற்கான டிக்கெட் ரத்து செய்யப்பட்டவுடன், அதன் ரீஃபண்ட் உடனடியாக உங்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்திருந்தது.ஆனால் இந்த நடைமுறையில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாகவும், மோசடிகள் நடைபெறுவதாக வாடிக்கையாளர்கள் பலர் இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு டிவிட்டர் வாயிலாக புகார் அளித்து வருகின்றனர். குறிப்பாக ரயில்வே பணத்தைத் திரும்ப பெறும் நடைமுறையின் போது ரயில்வே துறையிலிருந்து பேசுவதாக அழைப்பு வந்துள்ளது.

train,passengers,ticket,trust ,ரயில் ,பயணிகள், பணம், டிக்கெட்,

மேலும் உங்களுடைய டெபிட் , கிரெட் கார்டு, யுபிஐ ஸ்கேன் கோடு அனுப்புங்கள் உங்களுக்கு பணத்தைத் திரும்பி அனுப்பிகிறோம் என்று வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு வந்துள்ளதோடு பலர் ஏமாந்துவிட்டதாக புகார்கள் எழுந்துள்ளது.இந்நிலையில் தான் ரயில்வே நிர்வாகம் டிவிட்டர் வாயிலாக இதற்கு பதிலளித்துள்ளது. அதில், “ UPI யைப் பயன்படுத்தி பயனர்களிடம் நிதி மோசடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே iRCTC யில் இருந்து உங்களுக்கு வருவது போன்று எந்தவொரு இணைப்புகள் அல்லது சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வரும் பட்சத்தில் நீங்கள் அதற்குப் பதிலளிக்க வேண்டாம் என்றும் மோசடியில் ஈடுபடும் நபர்கள் வெவ்வேறு எண்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு விடுவார்கள்.எனவே அவற்றை நம்பி நீங்கள் ஏமாற வேண்டும் என்று இந்திய ரயில்வே வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் ரயில்வே பணத்தை திரும்ப பெறும் நடைமுறையில் ஊழியர்கள் யாரும் பணியாற்ற மாட்டார்கள் என்பதை நினைவில் கொண்டு தேவையற்ற அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் எனவும் இந்திய ரயில்வே டிவிட் செய்துள்ளது. மேலும் “இந்திய ரயில்வே, ஐஆர்சிடிசி அல்லது அதன் ஊழியர்கள் பணத்தைத் திரும்பப்பெறும் பிரச்சனையில் உங்களை தொலைபேசியின் வாயிலாக அழைக்க மாட்டார்கள் எனவும் டெபிட் கார்டு/கிரெடிட் கார்டு எண்/OTP/ATM பின்/CVV எண் அல்லது பான் எண் அல்லது பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட வங்கித் தகவல்களைக் கேட்கவே மாட்டார்கள் என இந்திய ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதோடு மொபைல் ,லேப்டாப் ,டெஸ்க்டாப் போன்வற்றில் Anydesk,Teamviewer போன்ற ரிமோட் கண்ட்ரோல் ஆப்ஸை நிறுவ வேண்டாம் எனவும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

எனவே இனிமேலாவது ரயில் பயணிகள் தேவையில்லாமல் உங்களுக்கு வரும் அழைப்புகளை நம்பி ஏமாறாமல் பணத்தைத் திரும்பப் பெறும் நடைமுறையில் எச்சரிக்கையோடு இருக்க முயலுங்கள்.

Tags :
|
|