Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இத்தனை பேர் மின் இணைப்புடன், ஆதார் எண்ணுடன் இணைப்பதில் முறைகேடு

இத்தனை பேர் மின் இணைப்புடன், ஆதார் எண்ணுடன் இணைப்பதில் முறைகேடு

By: vaithegi Mon, 20 Mar 2023 4:03:17 PM

இத்தனை பேர் மின் இணைப்புடன், ஆதார் எண்ணுடன் இணைப்பதில் முறைகேடு

சென்னை: தமிழகத்தில் மின் இணைப்பு பெற்றவர்கள் தங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மின்சாரத்துறை அறிவித்தது. மேலும் இதை பொதுமக்கள் விரைவில் மேற்கொள்ள கடந்த நவம்பர் 15-ம் தேதி முதல் டிசம்பர் 28-ம் தேதி வரை 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டது.

ஆனால் இக்கால அவகாசத்திற்குள் பெரும்பாலானோர் இணைக்காததால், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் மொத்தம் 2.67 கோடி பேரில், மின் நுகர்வோர் 95 லட்சம் பேர் வாடகை பிரிவில் பதிவு செய்துள்ளனர்.

electricity connection,aadhaar no ,மின் இணைப்பு, ஆதார் எண்


ஆனால் இதில் உண்மையில் 4 லட்சம் பேர் மட்டுமே வாடகைதாரர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து இதில், 91 லட்சம் பேர் வீட்டு உரிமையாளர்கள் மின் இணைப்புடன், ஆதார் எண்ணுடன் இணைப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது, வீட்டு உரிமையாளர்கள் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால், தங்களுடைய சொத்துக்களுக்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்று எண்ணி தங்களின் வாடகைதாரர்களுடைய ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளதாக மின் ஆளுமை முகமை தெரிவித்துள்ளது. அதனால் இந்த 91 லட்சம் வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளுமாறு மின்வாரிய துறை மின் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Tags :