Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துறைத் தலைவர்கள் நியமனத்தில் முறைகேடு... பாமக நிறுவனர் கண்டனம்

துறைத் தலைவர்கள் நியமனத்தில் முறைகேடு... பாமக நிறுவனர் கண்டனம்

By: Nagaraj Mon, 18 July 2022 10:24:54 PM

துறைத் தலைவர்கள் நியமனத்தில் முறைகேடு... பாமக நிறுவனர் கண்டனம்

சென்னை: பாமக நிறுவனர் கண்டனம்... அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவா்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 12 துறைகளில் காலியாக இருந்த துறைத் தலைவா் பதவிகள் சமீபத்தில் நிரப்பப்பட்டன. அவற்றில் வேதியியல், விலங்கியல் உள்ளிட்ட 6 துறைகளின் தலைவா்கள் பதவிக்கு தகுதியிலும், பணி மூப்பிலும் குறைந்தவா்களை பல்கலைக்கழக நிா்வாகம் நியமித்துள்ளது.

appointments,malpractice,investigation,bamaga founder,ramadoss ,நியமனங்கள், முறைகேடு, விசாரணை, பாமக நிறுவனர், ராமதாஸ்

துறைத் தலைவா் பதவியை பணி மூப்பில் முதலிடத்தில் இருப்பவரைக் கொண்டுதான் நியமிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக விதிகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவும் இதையே வலியுறுத்துகிறது. தகுதியானவா்களுக்கான வாய்ப்பைப் பறித்து, பணி மூப்பு இல்லாதவா்களுக்கு கொடுப்பதைவிட கொடுமையான சமூக அநீதி இருக்க முடியாது.


விதிகளை மீறி முறைகேடாக மேற்கொள்ளப்பட்ட துறைத் தலைவா்கள் உள்ளிட்ட அனைத்து நியமனங்களையும் ரத்து செய்ய வேண்டும். நியமனங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

Tags :