Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • `Hey’ என்று வாட்ஸ்அப்பில் அனுப்பியது குற்றமா? ஊழியருக்குப் பாடம் எடுத்த உயர் அதிகாரி..

`Hey’ என்று வாட்ஸ்அப்பில் அனுப்பியது குற்றமா? ஊழியருக்குப் பாடம் எடுத்த உயர் அதிகாரி..

By: Monisha Wed, 06 July 2022 8:11:11 PM

`Hey’ என்று வாட்ஸ்அப்பில் அனுப்பியது குற்றமா? ஊழியருக்குப் பாடம் எடுத்த உயர் அதிகாரி..

பெய்ஜிங்: சந்தீப் என்பவர் தனது ஊழியரிடம் வாட்ஸ்அப்பில் பேசிய உரையாடல் தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சந்தீப், தன்னிடம் வேலை செய்யும் ஷ்ரேயாஸ் என்ற ஊழியரிடம் "உங்களுக்கு அளிக்கப்பட்ட பணிகள் நிறைவடைந்து விட்டனவா?" என்று கேட்கிறார்.

அதற்கு ஷ்ரேயாஸ், “Hey, no. Not yet.” என்று பதிலளிக்கிறார். இதனால் கோபமுற்ற சந்தீப், "என் பெயர் சந்தீப். என் பெயர் ஞாபகம் இல்லாவிட்டால், நீங்கள் என்னை 'Hi' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அழைக்கலாம். தயவுசெய்து அலட்சியமாக ‘Hey' என்று என்னை அழைக்கவேண்டாம். அது என்னைக் காயப்படுத்துகிறது" என்று கூறியுள்ளார்.

whatsapp,crime,office,employee ,ஊழியர், புகைப்படம், வாட்ஸ்அப்,ஏய்,

இதற்குப் பதிலளித்த சந்தீப், "வாட்ஸ்அப் இனி தனிப்பட்ட விஷயங்களுக்கான இடமே கிடையாது. அது தற்போது தொழில்முறையாகவும் பயன்படுத்தப்படுகிறது. என்னுடைய கருத்துகளை நான் உங்கள் மீது திணிக்கவில்லை. நீங்கள் இப்போதே இதைப் புரிந்து கொண்டால் நல்லது. இப்போது புரிந்துகொள்ளாவிட்டாலும் விரைவில் இதைப் புரிந்து கொள்வீர்கள்" என்று சூசகமாக அதிகாரத் தொனியில் பதிலளித்துள்ளார்.

சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் இந்த ஸ்க்ரீன் ஷாட்டில் இது யார், எங்கே நடந்தது போன்ற தகவல்கள் இல்லை. எனினும் பலர் இதைப் பகிர்ந்து தங்கள் கருத்துகளைக் கூறி வருகின்றனர். பலர் அந்த ஊழியர் அனுப்பிய மெசேஜ் அப்படியொன்றும் மரியாதைக் குறைவானதாக இல்லையென்றும், அவர் சரியாகவே பதிலடி கொடுத்தார் என்றும் பேசி வருகின்றனர். சிலர் அதிகாரிக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

Tags :
|
|