Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மயிலாப்பூருக்கு சென்று விலை கேட்டால் போதுமா? ப.சிதம்பரம் கேள்வி எழுப்புகிறார்

மயிலாப்பூருக்கு சென்று விலை கேட்டால் போதுமா? ப.சிதம்பரம் கேள்வி எழுப்புகிறார்

By: Nagaraj Mon, 10 Oct 2022 12:34:34 PM

மயிலாப்பூருக்கு சென்று விலை கேட்டால் போதுமா? ப.சிதம்பரம் கேள்வி எழுப்புகிறார்

திருப்பூர்: நாட்டின் நிதியமைச்சர் மயிலாப்பூருக்குச் சென்று சுண்டைக்காய் விலை என்ன? கீரை விலை விலை என்ன? என்று கேட்டால் விலைவாசி பிரச்சினைக்கு தீர்வு கிட்டாது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.


திருப்பூர் மாவட்டம் காங்கேயம் குட்டப்பாளையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொங்கு பகுதியில் காங்கேயம் மாடுகளை பல விவசாயிகள் வளர்ப்பதற்கும், பால் உற்பத்தியை பெருக்குவதற்கும் இன்னும் தமிழக அரசு ஊக்கம் தரம் வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்.

 ,
ராகுல்காந்தி, வெற்றிப்பயணம், நிதியமைச்சர், கீரை விலை, பலம் குறையாது

சென்னை மயிலாப்பூரில் சென்று நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுண்டைக்காய் விலை என்ன? கீரை விலை விலை என்ன? என்று கேட்பது மட்டும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாகாது.


ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஒரு வெற்றிப் பயணம். இந்த யாத்திரை அவரவர் வீடுகளில் முடங்கிக் கிடந்த காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அபிமானிகளை வீட்டை விட்டு வெளியில் வர வைத்துள்ளது. இந்த யாத்திரைக்கு மேலும் மேலும் பலம் கூடும், பலம் குறையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :