Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லடாக் பகுதியை யாரும் பறிக்கவில்லை என மோடி சொல்வது உண்மையா ?- ராகுல் காந்தி

லடாக் பகுதியை யாரும் பறிக்கவில்லை என மோடி சொல்வது உண்மையா ?- ராகுல் காந்தி

By: Karunakaran Sat, 04 July 2020 09:40:05 AM

லடாக் பகுதியை யாரும் பறிக்கவில்லை என மோடி சொல்வது உண்மையா ?- ராகுல் காந்தி

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ஆம் தேதி இந்திய-சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இருப்பினும் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி லடாக்கில் லே பகுதிக்கு சென்று அங்கு பார்வையிட்டார். நிமு முகாமில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, லடாக் பகுதியை யாரும் பறிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.

modi,rahul gandhi,ladakh,border ,மோடி, ராகுல் காந்தி, லடாக், எல்லை

தற்போது, பிரதமர் மோடி நேற்று ராணுவ வீரர்கள் மத்தியில் பேசியது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், லடாக் பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனா நமது நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டதாக கூறுகிறார்கள். ஆனால் பிரதமர் நமது நிலத்தை யாரும் பறிக்கவில்லை என்று சொல்கிறார். இதில் யாரோ பொய் சொல்கிறார்கள் என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் அவர், லடாக்கில் இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்து இருப்பதாக லடாக்கைச் சேர்ந்தவர்கள் பேசிய வீடியோவையும் இணைத்துள்ளார். பிரதமர் மோடியின் லடாக் பயணம் நாடு முழுவதும் பாராட்டும் வகையில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|