Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாஜவின் வேட்பாளர் இவர்தானா? வெங்கையா நாயுடு பெயர் அடிப்படுகிறது

பாஜவின் வேட்பாளர் இவர்தானா? வெங்கையா நாயுடு பெயர் அடிப்படுகிறது

By: Nagaraj Tue, 21 June 2022 6:25:24 PM

பாஜவின் வேட்பாளர் இவர்தானா? வெங்கையா நாயுடு பெயர் அடிப்படுகிறது

புதுடில்லி: இவர்தானா வேட்பாளர்... குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக வெங்கைய நாயுடு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய குடியரசுத் துணைத் தலைவரான வெங்கைய நாயுடுவை இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

meeting,consultation,candidate,rajnath singh,venkaiah naidu,bjp. ,சந்திப்பு, ஆலோசனை, வேட்பாளர், ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு, பாஜ.,

இதைத் தொடர்ந்து, ஆளும் கூட்டணி சார்பில் நாயுடு போட்டியிடும் வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிளுடனும் பேச்சு நடத்தும் பணியை ராஜ்நாத் சிங், நட்டா ஆகியோரிடம் பாரதிய ஜனதா ஒப்படைத்துள்ளது.

இன்று பின்னேரத்தில் வேட்பாளர் தெரிவு பற்றி ஆலோசிப்பதற்காக பா.ஜ.க. உயர்நிலைக் குழு கூடவுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.

Tags :