Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்கானிஸ்தான் சிறைச்சாலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் கொலை

ஆப்கானிஸ்தான் சிறைச்சாலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் கொலை

By: Karunakaran Tue, 04 Aug 2020 10:07:11 AM

ஆப்கானிஸ்தான் சிறைச்சாலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் கொலை

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டு போர் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே நடக்கிறது. இதில் அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளும் செயல்படுகிறது. முடிவில்லாமல் செல்லும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்க அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசும், தலீபான்களுடன் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்த முயன்று வருகிறது. அமைதியை நிலைநாட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பயங்கரவாத தாக்குதல்கள் ஓய்ந்தபாடில்லை.

is,afghanistan,prison,terrorist attack ,ஐ.எஸ், ஆப்கானிஸ்தான், சிறை, பயங்கரவாத தாக்குதல்

தலீபான் பயங்கரவாதிகள் ராணுவத்தினரையும், போலீசாரையும் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை குறிவைத்து கொடூர தாக்குதல்களை நடத்துகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் உள்ள மிகப்பெரிய சிறைச்சாலையில் நேற்று முன்தினம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

பயங்கரவாதிகள் தங்கள் கண்ணில் பட்ட அனைத்தையும் சுட்டு தள்ளி தாக்குதல் நடத்தினர். இதற்கு சிறை காவலர்கள் தங்களது துப்பாக்கிகளால் அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே சண்டை நேற்று காலை வரை நீடித்தது. இந்த கொடூர தாக்குதலில் சிறை காவலர்கள் மற்றும் கைதிகள் உள்பட 29 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 50 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த தாக்குதலின் போது, 100-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையிலிருந்து தப்பி ஓடினர்.

Tags :
|
|