Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடக, கேரள மாநிலங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் - ஐநா தகவல்

கர்நாடக, கேரள மாநிலங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் - ஐநா தகவல்

By: Karunakaran Sun, 26 July 2020 5:59:00 PM

கர்நாடக, கேரள மாநிலங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் - ஐநா தகவல்

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் ஆகிய ஆசிய துணைக் கண்ட நாடுகளில் 150 முதல் 200 அல்-கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு எண்ணிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் மற்றும் தடை குறித்த 26-வது அறிக்கையில், அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தற்போதைய தலைவர் ஒசாமா மெகமூத், தனது தலைவர் ஆசிம் உமர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார். கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

karnataka,kerala,un,terrorists ,கர்நாடகா, கேரளா, ஐ.நா., பயங்கரவாதிகள்

கடந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரில் ராணுவத்துக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்தியாவில் புதிய நிர்வாகப் பகுதியை உருவாக்கி இருக்கிறோம் என்று ஐஎஸ்எல் அமைப்பின் இந்தியக் கிளை கடந்த 2019-ம் ஆண்டு மே 10-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அதன்படி, ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செய்தி குறித்து வெளியிடும் அமாக் நியூஸ் ஏஜென்ஸியில் அந்த அமைப்பு தங்களின் புதிய கிளையின் பெயரை அரபு மொழியில் “விலையா ஆஃப் ஹிந்த்”(இந்திய நிர்வாகப் பகுதி) எனத் தெரிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|