Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீலகிரியில் கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பு

நீலகிரியில் கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பு

By: Monisha Fri, 04 Dec 2020 10:26:25 AM

நீலகிரியில் கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பு

சுற்றுலா தலமான நீலகிரியில் நேற்று முன்தினம் வரை 7 ஆயிரத்து 441 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. கடந்த அக்டோபர் மாதம் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது. ஆனால் நவம்பர் மாத இறுதியில் தினமும் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 20-ஐ கடந்தது.

கொரோனா பரவல் இரண்டாவது அலை வீசும் அபாயம் உள்ளதால், நீலகிரியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று அறிகுறி கண்டறியப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றது. தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

corona,test,symptom,isolation,observation ,கொரோனா,பரிசோதனை,அறிகுறி,தனிமை,கண்காணிப்பு

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து 14 நாட்கள் வெளியாட்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் அதிகரித்து காணப்பட்டது.

தற்போது பாதிப்பு குறைந்து உள்ளதால் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களும் குறைந்துள்ளன. தற்போது 113 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
|
|