Advertisement

இஸ்ரேல் - ஹமாஸ் விரைவில் போர் நிறுத்த உடன்படிக்கை?

By: Nagaraj Wed, 22 Nov 2023 9:52:09 PM

இஸ்ரேல் - ஹமாஸ் விரைவில் போர் நிறுத்த உடன்படிக்கை?

காஸா: இஸ்ரேல் - ஹமாஸ் விரைவில் போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்படும் என்று ஹமாஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

50 பிணை கைதிகளை ஹமாஸ் விடுவித்தால், 3 நாட்களுக்கு போரை நிறுத்தி மக்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க கத்தார் அரசு மத்தியஸ்தம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

talks,us,qatar,hostages,ceasefire ,பேச்சு வார்த்தைகள், அமெரிக்கா, கத்தார், பிணை கைதிகள், போர் நிறுத்தம்

இஸ்ரேல் ஹமாஸ் பேச்சுவார்த்தையில் முதன்முறையாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்த நிலையில், போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட உள்ளதாக கத்தாரில் ஹமாஸ் தலைவர் ஹனியா தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற பேச்சுவார்த்தைகள் கடைசி நிமிடத்தில் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Tags :
|
|
|