Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு

கொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு

By: Karunakaran Fri, 07 Aug 2020 08:41:03 AM

கொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதில் இஸ்ரேலும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலில் தடுப்பூசி உருவாக்கும் திட்ட நிலவரத்தின் முன்னேற்றம் குறித்து கேட்டு அறிவதற்காக ராணுவ மந்திரி பென்னி காண்ட்ஸ், அங்கு தனது அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘ஐஐபிஆர்’ என அழைக்கப்படுகிற இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சென்று, இயக்குனர் பேராசிரியர் ஷபிராவை சந்தித்தார்.

israel,corona possesse,corona vaccine,corona virus ,இஸ்ரேல், கொரோனா உடைமை, கொரோனா தடுப்பூசி, கொரோனா வைரஸ்

அதன்பின் பேராசிரியர் ஷபிரா வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது. குறிப்பிட்ட கால அட்டவணையின் அடிப்படையில் தடுப்பூசி கடந்து செல்ல வேண்டிய ஒழுங்குமுறை செயல்முறைகள் உள்ளன. இலையுதிர் கால விடுமுறைக்கு பின்னர் நாங்கள் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகளை தொடங்குவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராணுவ மந்திரி பென்னி காண்ட்ஸ் கூறுகையில், இஸ்ரேலில் ஐ.ஐ.பி.ஆர். உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனை, இலையுதிர் கால விடுமுறைக்கு பின்னர் தொடங்கும் என்று கூறினார்.


Tags :
|