Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்களின் பாதுகாப்புக்காக மிதக்கும் தியேட்டர்களை திறந்த இஸ்ரேல்

மக்களின் பாதுகாப்புக்காக மிதக்கும் தியேட்டர்களை திறந்த இஸ்ரேல்

By: Karunakaran Thu, 27 Aug 2020 5:34:33 PM

மக்களின் பாதுகாப்புக்காக மிதக்கும் தியேட்டர்களை திறந்த இஸ்ரேல்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவு உள்ளதால், பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இஸ்ரேலில் இரண்டாம் பெரிய நகரமான டெல்-அவிவ்வில் நகர நிர்வாகம், திரைப்பட ரசிகர்களுக்காக அந்நகரத்தின் ஏரிகளை மிதக்கும் திரையரங்கங்களாக மாற்றியுள்ளது.

இதற்காக யார்கோன் பார்க் ஏரியில், 70 படகு மற்றும் துடுப்புகள், 2 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டு சமூக இடைவெளி கடைபிடித்து திரைப்படங்களை ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக டெல் அவிவ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

israel,floating theaters,safety,corona virus ,இஸ்ரேல், மிதக்கும் தியேட்டர்கள், பாதுகாப்பு, கொரோனா வைரஸ்

வணிக வளாகங்கள், நவீன திரையரங்குகள் அனைத்தும் கொரோனா வரஸ் பரவல் கட்டுப்பாடுகளால் மூடியிருப்பதால், வருமானம் ஈட்டும் வகையிலும், அதே சமயம் சமூக இடைவெளிக்கு வாய்ப்புகள் இருக்கும் வகையிலும் திறந்த வெளி திரையரங்கங்களை உருவாக்கியுள்ளதாக டெல் அவிவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த படங்கள் மாதத்தின் கடைசி வாரங்களின் மாலைகளில் திரையிடப்படுவதாகவும் டெல் அவிவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுமையாக இருப்பதால் பலரும் ஆர்வத்துடன் இங்கு படங்களை காண செல்கின்றனர்.

Tags :
|
|