Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இஸ்ரேல் – பாலஸ்தீன போர்... அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்

இஸ்ரேல் – பாலஸ்தீன போர்... அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்

By: Nagaraj Tue, 10 Oct 2023 07:05:41 AM

இஸ்ரேல் – பாலஸ்தீன போர்... அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்

இஸ்ரேல்: இஸ்ரேல் பாலஸ்தீன போரால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையே யுத்தம் ஆரம்பித்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என அமெரிக்கா கூறியிருப்பது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

யாருமே எதிர்பாராத வகையில் கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினர் திடீரென தாக்குதல் நடத்தினர். ஹமாஸின் இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது கடந்த பல ஆண்டுகளாக பாலஸ்தீன இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என பலர் இஸ்ரேல் ராணுவத்தினரால் கைது செய்யப்படுவதும், அவர்களை அந்நாட்டு அரசு விடுவிக்க மறுத்துவரும் காரணத்தால் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

israel,palestine,war,civilians,vulnerability,america ,இஸ்ரேல், பாலஸ்தீனம், போர், பொதுமக்கள், பாதிப்பு, அமெரிக்கா

ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில் இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடுமையான வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் ஏவுகனைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இஸரேல் பிரதமர் பாலஸ்தீனத்திற்கு எதிராக போர் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த போரை கூர்ந்து கவனித்த அமெரிக்கா, இதுதான் தங்களுடைய ஆயுத வியாபாரத்துக்கு சரியான நேரம் என்பதுபோல் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறோம் எனக் கூறியுள்ளது. மேலும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்புவதாகவும், அமெரிக்காவின் போர்க்கப்பலை இஸ்ரேல் நாட்டிற்கு நெருக்கமாக நகர்த்துவதாகவும் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இஸ்ரேலுக்கு 3 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகளை செய்து வரும் அமெரிக்கா, அதில் உள்ள பெரும்பாலான ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அனுப்பிவிட்டனர். இது தவிர இஸ்ரேல் நாட்டில் உள்ள தன் ராணுவ தளவாடங்களில் சுமார் $2 பில்லியன் மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்காவை வைத்துள்ளது.

அவசர காலத்தில் அமெரிக்கா பயன்படுத்துவதற்காக இந்த ஆயுதங்களை வைத்துள்ள நிலையில், இதை இஸ்ரேல் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. இந்த போரால் பாதிக்கப்படுவது சாதாரண அப்பாவி பொதுமக்களும், குழந்தைகளும்தான் என்பதுதான் சோகம்.

Tags :
|
|