Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரிமோட் கண்ட்ரோல் ஆயுதங்களைப் பயன்படுத்த இஸ்ரேல் திட்டம்

ரிமோட் கண்ட்ரோல் ஆயுதங்களைப் பயன்படுத்த இஸ்ரேல் திட்டம்

By: Nagaraj Mon, 30 Oct 2023 11:45:42 AM

ரிமோட் கண்ட்ரோல் ஆயுதங்களைப் பயன்படுத்த இஸ்ரேல் திட்டம்

இஸ்ரேல்: ரிமோட் கண்ட்ரோல் ஆயுதம்... காஸாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான யுத்தத்தில் ரிமோட் கண்ட்ரோல் ஆயுதங்களைப் பயன்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

காஸாவில் முழு அளவிலான தரைவழித் தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல், செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் ஆயுதங்கள், ரிமோட் கண்ட்ரோல் மற்றும் ரோபோவைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

hamas,israel,defense forces,casualties,remote control ,ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல், பாதுகாப்பு படை, உயிரிழப்புகள், ரிமோட் கண்ட்ரோல்

இதற்காக ஏற்கனவே பல்வேறு தானியங்கி ஆயுதங்களை காஸா எல்லைப் பகுதியில் நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. எத்தகைய நிலப்பரப்பிலும் இயங்கும் ரோபோ வாகனம், ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகளையும் பயன்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் தங்கள் பக்கம் உயிரிழப்புகளைக் குறைக்க முடியும் என்றும், ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கங்களைக் கண்டறிந்து அழிக்க முடியும் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|