Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெற்றிகரமாக புதிய உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய இஸ்ரேல்

வெற்றிகரமாக புதிய உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய இஸ்ரேல்

By: Karunakaran Mon, 06 July 2020 3:15:27 PM

வெற்றிகரமாக புதிய உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய இஸ்ரேல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தினாலும், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், புதிய உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் புதிய உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்த புதிய உளவு செயற்கைக்கோள் ஒஃபேக் 16 எனப்படுகிறது. ஒஃபேக் 16 மேம்பட்ட திறன்களைக் கொண்ட மின்-ஒளியியல் உளவு செயற்கைக்கோள் ஆகும். இன்று அதிகாலை 4 மணிக்கு விண்ணில் ஒஃபேக் 16 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

spy satellite,israel,defense minister,penny kantz ,உளவு செயற்கைக்கோள், இஸ்ரேல், பாதுகாப்பு மந்திரி, பென்னி காண்ட்ஸ்

இதுகுறித்து இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒஃபேக் 16 என்ற புதிய உளவு செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இன்று அதிகாலை 4 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது புவியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்ட இந்த செயற்கைகோள், தகவல்களை பரிமாற தொடங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து அந்நாட்டின் பாதுகாப்பு மந்திரி பென்னி கான்ட்ஸ் கூறுகையில், இஸ்ரேல் அரசின் பாதுகாப்பிற்கு தொழில்நுட்ப மேன்மையும் உளவுத்துறை திறன்களும் அவசியம். எனவே தான் ஒஃபேக் 16 உளவு செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|