Advertisement

இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதல்: ஹமாஸ் தளபதி பலி

By: Nagaraj Sun, 05 Nov 2023 09:42:49 AM

இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதல்: ஹமாஸ் தளபதி பலி

இஸ்ரேல்: ஹமாஸ் தளபதி பலி... காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மும்முனைத் தாக்குதலில் மேலும் ஒரு ஹமாஸ் தளபதி பலி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

காஸா மீது வான், கடல் மற்றும் தரை வழித் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல் ராணுவம், முஸ்டஃபா டலூல் என்ற ஹமாஸ் தளபதி வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

ground fighting,soldiers,israeli government,maps ,தரை வழி சண்டை, ராணுவ வீரர்கள், இஸ்ரேல் அரசு, வரைபடங்கள்

அதை தொடர்ந்து ராணுவத்தினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஏ.கே-47 துப்பாக்கிகள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் வரைபடங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

ஹமாஸுடன் நடந்த தரை வழி சண்டையில் இதுவரை ராணுவ வீரர்கள் 23 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

Tags :