Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்கலத்தை அனுப்ப இருப்பதாக இஸ்ரோ அறிவிப்பு

இந்த தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்கலத்தை அனுப்ப இருப்பதாக இஸ்ரோ அறிவிப்பு

By: vaithegi Sun, 27 Aug 2023 2:44:46 PM

இந்த தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்கலத்தை அனுப்ப இருப்பதாக இஸ்ரோ அறிவிப்பு

இந்தியா: சந்திராயன் 3 விண்கலத்தின் வெற்றியை தொடர்ந்து வருகிற செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை அனுப்ப இருப்பதாக இஸ்ரோ தெரிவிப்பு ..இந்தியாவின் 3-வது முயற்சியாக சந்திராயன் 3 விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி மாலை 6.04 மணியளவில் தென் துருவத்தில் தரையிறங்கி சாதனை படைத்து உள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திராயன் 3 விண்கலத்தின் விக்டர் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கி தனது ஆய்வுப் பணியை துவங்கியிருக்கிறது. இதையடுத்து இஸ்ரோ அடுத்த திட்டமாக சூரியனை ஆய்வு செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது.

isro,chandrayaan,sun ,இஸ்ரோ ,சந்திராயன் ,சூரியன்


மேலும், சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 என்கிற விண்கலத்தை செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்த இருப்பதாகவும் இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

அதாவது, ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளியை நிலைநிறுத்த இருப்பதாகவும் இதன் பின் ஆதித்யா எல் 1 விண்கலம் அதற்கான ஆய்வுப் பணியை தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த, ஆதித்யா எல் 1 திட்டத்தின் மூலமாக சூரிய கதிர்வீச்சு, சூரிய புயல் மற்றும் பூமியில் அடுத்தடுத்து ஏற்படும் மாற்றங்கள் பற்றிய முழு ஆய்வுனையும் செய்ய இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

Tags :
|