Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விகாஸ் இன்ஜினின் சோதனை ஓட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்திய இஸ்ரோ

விகாஸ் இன்ஜினின் சோதனை ஓட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்திய இஸ்ரோ

By: Nagaraj Fri, 11 Aug 2023 8:15:33 PM

விகாஸ் இன்ஜினின் சோதனை ஓட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்திய இஸ்ரோ

சென்னை; சத்தமின்றி செய்த இஸ்ரோ... விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் இஸ்ரோவின் திட்டம்தான் ககன்யான். இத்திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள விகாஸ் இன்ஜினின் சோதனை ஓட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது இஸ்ரோ.

சந்திரயான்-3 திட்டத்திற்குப் பிறகு இஸ்ரோவின் மிகப்பெரிய கனவு திட்டமாக இருப்பது ககன்யான் திட்டம் தான். இத்திட்டத்தின்படி பூமியிலிருந்து மனிதர்களை, இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்புகிறது. அங்கே பல்வேறு விதமான சோதனைகளை செய்துவிட்டு அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்குக் கொண்டு வருகிறது.

இத்திட்டம் சார்ந்த பணியில்தான் தற்போது இஸ்ரோ மும்முரமாக செயல்பட்டு வருகிறது. சந்திரயான் 3 திட்டம் கிட்டத்தட்ட வெற்றியடைந்த நிலையில், இன்னும் சில நாட்களில் இத்திட்டத்தின் முழு வெற்றி குறித்த உண்மைகள் தெரிந்துவிடும்.

அடுத்த சில வருடங்களில் இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ககன்யான் திட்டத்தில் மொத்தம் பூமியிலிருந்து மூன்று மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள்.

gaganyan,project,pride,isro,panagudi,research centre ,ககன்யான், திட்டம், பெருமை, இஸ்ரோ, பணகுடி, ஆராய்ச்சி மையம்

விண்வெளியில் அவர்கள் மூன்று நாட்கள் ஆய்வு செய்த பிறகு பத்திரமாக பூமிக்கு வருவார்கள். இத்திட்டத்திற்காக HLVM-3 என்ற ராக்கெட்டை இஸ்ரோ பயன்படுத்தப் போகிறது.

அதாவது தற்போது இஸ்ரோவிடம் இருக்கும் LVM-3 ராக்கெட்டில் கூடுதலாக மனிதர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பும் அம்சத்தை இணைத்து உருவாக்கப் போகிறார்கள். இந்த ராக்கெட்டில் கூடுதலாக 'க்ரூ எஸ்கேப் சிஸ்டம்' என்ற ஒரு பாகமும் இணைக்கப் படுகிறது. இது ராக்கெட்டில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், விண்வெளி வீரர்களை எந்த பாதிப்பும் இல்லாமல் பூமிக்கு பத்திரமாகக் கொண்டுவர வடிவமைக்கப்பட்ட சாதனமாகும். எனவே இத்திட்டத்தில் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

HLVM-3 ராக்கெட்டை இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட விகாஸ் என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக இரண்டாம் தலைமுறை விகாஸ் என்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜினை தான் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இஸ்ரோவுக்கு சொந்தமான பணகுடி மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சோதனை செய்தனர்.

இதற்கான சோதனை சுமார் 670 வினாடிகள் நடந்து வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இந்த என்ஜின் தற்போது ககன்யான் திட்டத்திற்காக தயாராகிவிட்டது எனலாம். இத்திட்டம் வெற்றிகரமாக முடிந்தால் இந்திய நாட்டுக்கு மிகப்பெரிய பெருமையைத் தேடித் தரும்.

Tags :
|
|