Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆளில்லா விண்கலங்களை அனுப்பி சோதனை செய்யும் பணி... இஸ்ரோ முடிவு

ஆளில்லா விண்கலங்களை அனுப்பி சோதனை செய்யும் பணி... இஸ்ரோ முடிவு

By: Nagaraj Sat, 07 Oct 2023 2:05:54 PM

ஆளில்லா விண்கலங்களை அனுப்பி சோதனை செய்யும் பணி... இஸ்ரோ முடிவு

ஐதராபாத்: சோதனை செய்யும் பணி... ககன்யான் திட்டத்தில் ஆளில்லா விண்கலங்களை விண்ணில் அனுப்பி சோதனை செய்யும் பணிகளை இஸ்ரோ நிறுவனம் தொடங்கியுள்ளது.

விண்ணுக்கு அனுப்பப்படும் மனிதர்களை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துவரும் க்ரூ எஸ்கேப் சிஸ்டத்தின் செயல்திறனை இஸ்ரோ நிறுவனம் பரிசோதிக்க உள்ளது.

kaganyan,plan,mission,isro,three days,study ,
ககன்யான், திட்டம், நோக்கம், இஸ்ரோ, மூன்று நாட்கள், ஆய்வு

ஆய்வு முடித்து பூமிக்குத் திரும்போது அசம்பாவிதம் நடந்தாலும் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வரும் வாகனத்தை இஸ்ரோ நிறுவனம் சோதனை செய்ய உள்ளது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பலகட்ட சோதனைகளை இஸ்ரோ நிறுவனம் முன்னெடுத்துள்ளது. இதற்காக, சென்னை நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ள பிரத்யேக கலன்களை, நான்கு கிலோ மீட்டர் உயரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு கடலில் விடப்படும்.

அதன்மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள், சாதக, பாதகங்களை ஆய்வு செய்து அடுத்தகட்ட சோதனை முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புவியின் தாழ்வட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் மனிதர்களை அனுப்பி மூன்று நாள்கள் ஆய்வு மேற்கொண்டு அதன்பின் அவர்களை பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டுவருவதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கமாகும்.

Tags :
|
|