Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிஎஸ்டிஎம் சான்றிதழ் வழங்குவது .. பள்ளிக்கல்வி ஆணையர் தமிழக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை

பிஎஸ்டிஎம் சான்றிதழ் வழங்குவது .. பள்ளிக்கல்வி ஆணையர் தமிழக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை

By: vaithegi Thu, 18 Aug 2022 1:57:43 PM

பிஎஸ்டிஎம் சான்றிதழ் வழங்குவது  ..  பள்ளிக்கல்வி ஆணையர்  தமிழக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் (பிஎஸ்டிஎம் சான்றிதழ்) வழங்கும் பணி மிக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதை அடுத்து இச்சான்றிதழ் வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதன்படி , இ-சேவை மையங்கள் மூலமாக இதுவரைக்கும் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் அனைத்தும் மின்னஞ்சல் மூலமாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கே அனுப்பப்படவுள்ளன. இவ்வாறு பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்புகின்றனர்.

commissioner of school education,circular ,பள்ளிக்கல்வி ஆணையர்,சுற்றறிக்கை


இதையடுத்து, இந்த விண்ணப்பங்களை பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும், பள்ளித் தலைமையாசிரியர் அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தகுதியானவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்கு தகுந்த காரணத்தையும் தலைமையாசிரியா்கள் கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் எனவும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்கள் பிஎஸ்டிஎம் சான்றிதழ் வழங்கும் பணியினை சிறப்பாக செய்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும் எயாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :