Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குரங்கம்மை நோய் தொடர்பாக கனடாவின் அவசர பயண அறிவிப்பு வெளியிடல்

குரங்கம்மை நோய் தொடர்பாக கனடாவின் அவசர பயண அறிவிப்பு வெளியிடல்

By: Nagaraj Thu, 09 June 2022 11:29:57 AM

குரங்கம்மை நோய் தொடர்பாக கனடாவின் அவசர பயண அறிவிப்பு வெளியிடல்

கனடா: குரங்கம்மை நோய் தொற்று தொடர்பில் கனடா அவசர பயண அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் குரங்கம்மை நோய் பரவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பயண எச்சரிக்கை முன்எச்சரிக்கை என்றும் தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டுப் பயணங்களின் போது குரங்கம்மை நோய்த் தொற்று பரவுகை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த நாடுகளில் நோய்த் தொற்று அபாயம் காணப்படுகின்றது என்பது பற்றிய விபரங்கள் பட்டியலிடப்படவில்லை. பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குரங்கம்மை நோய் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

warning,outbreak,possibilities,travel control,report,canada ,எச்சரிக்கை, நோய் பரவும், சாத்தியங்கள், பயண கட்டுப்பாடு, அறிக்கை, கனடா

குரங்கம்மை தாக்கம் தொடர்பிலான தகவல்கள் திரட்டப்பட்டு அவை குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கியூபெக் மாகாணத்தில் 90 குரங்கம்மை நோய்த் தொற்றாளிகள் பதிவாகியுள்ளதுடன், ஒன்றாரியோ, பிரிட்டிஷ் கொலம்பியா உள்ளிட்ட மாகாணங்களிலும் குரங்கம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

படுக்கை விரிப்புக்கள், டவல்கள், தும்மல், இறுமல், பாலியல் தொடர்பு உள்ளிட்டனவற்றின் ஊடாக குரங்கம்மை நோய் பரவும் சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
|