Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்களின் தரம் குறித்து கூட்டுறவுத் துறை உத்தரவு ஒன்று வெளியீடு

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்களின் தரம் குறித்து கூட்டுறவுத் துறை உத்தரவு ஒன்று வெளியீடு

By: vaithegi Sat, 30 July 2022 11:56:13 AM

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்களின் தரம் குறித்து கூட்டுறவுத் துறை உத்தரவு ஒன்று  வெளியீடு

இந்தியா: ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ரேஷன் கடைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகின்றன. அரசின் பல நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களிடம் சென்றடைகின்றன. ஆனால் ரேஷன் கடைகளில் தகுதி உடையவர்களுக்கு ரேஷன் பொருள்கள் சரியாக கிடைக்கவில்லை என்று புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில் ரேஷன் கடைகளில் வாழங்கப்படும் பொருள்கள் தரம் குறித்து கூட்டுறவு துறை புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.அதன் படி நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பண்டங்களின் கசிவு மற்றும் தரையில் சிந்தும் பொருட்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு மீண்டும் விநியோகம் செய்யப்படாததை உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ration shop,quality of goods ,கூட்டுறவுத் துறை ,ரேஷன் கடை,பொருள்களின் தரம்

மேலும் நியாயவிலை கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை அனுப்பும் இடங்களிலேயே சரிபார்த்து தரமான அரிசியை மட்டுமே அனுப்பப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து நியாய விலைக்கடைகள் உட்புறமும் வெளிப்புறமும் தூய்மையாக இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யும்போது அத்தியாவசிய பொருட்கள் கீழே சிந்தாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் அந்த பொருள்களை பொது மக்களுக்கு வழங்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை ரேஷன் கடை அலுவலர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :