இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு
By: Nagaraj Sat, 19 Nov 2022 10:00:03 PM
சென்னை: ஹால் டிக்கெட் வெளியீடு... தமிழகத்தில் காவல்,சிறை மற்றும் தீயணைப்புத் துறையில் இரண்டாம் நிலை காவலராக சேர்வதற்கான எழுத்து தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைக்கு இரண்டாம் நிலை காவலர்களாக 3552 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதற்காக நவம்பர் 27ஆம் தேதி தமிழ் மொழி தகுதி மற்றும் முதன்மை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.
இரண்டு
தேர்வுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்படும். இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்
தற்போது தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை
விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
release |
download |