Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸ் அறிகுறிகள் தெரிய 8 நாட்கள் வரை ஆகலாம் - விஞ்ஞானிகள் தகவல்

கொரோனா வைரஸ் அறிகுறிகள் தெரிய 8 நாட்கள் வரை ஆகலாம் - விஞ்ஞானிகள் தகவல்

By: Karunakaran Mon, 10 Aug 2020 4:28:30 PM

கொரோனா வைரஸ் அறிகுறிகள் தெரிய 8 நாட்கள் வரை ஆகலாம் - விஞ்ஞானிகள் தகவல்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போதஹு உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அடைகாக்கும் காலம் பற்றி சீன விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். இதற்கு முன் கொரோனா வைரஸ் அடைகாக்கும் காலம் என்பது 4 அல்லது 5 நாட்கள் என கூறப்பட்டது.

தற்போது இந்த அடைகாக்கும் காலம் 8 நாட்கள் வரை நீளுவதாக சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை ஆராய்ந்த பின்னரே இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள், ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ என்ற அறிவியல் பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

corona virus,corona symptoms,8 days,corona prevalence ,கொரோனா வைரஸ், கொரோனா அறிகுறிகள், 8 நாட்கள், கொரோனா பாதிப்பு

பீஜிங் சீன பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சோங் யூ ஆகியோர், மிக குறைவான எண்ணிக்கையிலான மாதிரிகளையும், குறைந்த அளவிலான தரவுகளையும், பாதிக்கப்பட்டவர்களின் சுய அறிக்கைகள் அடிப்படையிலும் அடைகாக்கும் காலம் 4 அல்லது 5 நாட்கள் என்று கூறினர். ஆனால் தற்போது நடத்திய ஆய்வில், அடைகாக்கும் காலங்களை மதிப்பிடுவதற்கு குறைந்த செலவிலான அணுகுமுறை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

1,084 கொரோனா நோயாளிகளை ஆராய்ந்த போது, இவர்களுடைய கொரோனா வைரஸ் சராசரி அடை காக்கும் காலம் என்பது 7.75 நாட்கள் ஆகும் எனவும், அதில் 10 சதவீத நோயாளிகள் அடை காக்கும் காலம் 14.28 நாட்கள் என கண்டறிந்துள்ளனர். மேலும், 14 நாட்கள் தனிமப்படுத்தலை நிலையாக வைத்துள்ள சுகாதார அதிகாரிகளுக்கு இது கவலை தரக்கூடும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Tags :
|