Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சர்வதேச விமான பயணிகளுக்கு நாளை (சனிக்கிழமை) முதல் பரிசோதனை நடத்த முடிவு

சர்வதேச விமான பயணிகளுக்கு நாளை (சனிக்கிழமை) முதல் பரிசோதனை நடத்த முடிவு

By: vaithegi Fri, 23 Dec 2022 08:49:41 AM

சர்வதேச விமான பயணிகளுக்கு நாளை (சனிக்கிழமை) முதல் பரிசோதனை நடத்த முடிவு

புதுடெல்லி: விமான பயணிகளுக்கு பரிசோதனை .... சீனாவில் புதிய வகை உரு மாறிய கொரோனா (பிஎப்.7), வேகமாக பரவி கொண்டு வருகிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நுழைந்து விட்டது. இதையடுத்து இந்தியாவிலும் 3 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்புதிய வகை கொரோனா, இந்தியாவில் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனையே அடுத்து இது தொடர்பாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் டெல்லியில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பிரதமர் மோடி கொரோனா நிலைமை பற்றி நேற்று டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தினார்.a

international air passenger,test ,சர்வதேச விமான பயணி,பரிசோதனை


இதையடுத்து இந்த நிலையில் சர்வதேச விமான பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதில் முக்கியமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே நாளை முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறைக்கு, சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுயிருப்பதாவது:- வெளிநாடுகளில் இருந்து சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும்.

பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் பயணிகளை அவர்களின் நாடுகளின் அடிப்படையில் விமான நிறுவனங்களே தேர்வு செய்யலாம். அந்த பயணிகளிடமிருந்து மாதிரிகளை சேகரித்த பின்னரே விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும். பரிசோதனையில் கொரோனா கண்டறியப்பட்டால், அந்த மாதிரிகளை மரபணு சோதனைக்காக அனுப்பி வைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Tags :