Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அடுத்த மாதம் முதல், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்ய முடிவு

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அடுத்த மாதம் முதல், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்ய முடிவு

By: vaithegi Tue, 14 Mar 2023 6:30:02 PM

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அடுத்த மாதம் முதல், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்ய முடிவு

சென்னை: நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களிடம் இரும்புச்சத்து குறைபாடு உள்ளதால் ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட நோய்களால் பாதிப்படைகிறார்கள் என்று மத்திய அரசு ஆய்வு ஒன்றில் கண்டறிந்தது. அதனால் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்தது.

இதையடுத்து இந்த செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச் சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி-12 உள்ளிட்ட சத்துக்கள் உள்ளது. இதில் இருக்கும் இரும்புச் சத்து ரத்த சோகையை தடுக்கிறது, மேலும் அத்துடன் போலிக் அமிலம் கருவளர்ச்சி மற்றும் ரத்த உற்பத்திக்கு உதவுகிறது. வைட்டமின் பி-12 நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

rice,ration shops ,அரிசி , ரேஷன் கடைகள்

இந்நிலையில் தமிழகத்தில், திருச்சியில் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. இதே போல விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இருக்கும் ரேஷன் கடைகளில் அடுத்த மாதம் முதல், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் செறிவூட்டப்பட்ட அரிசியை சிலர் பிளாஸ்டிக் அரிசி என கூறி வதந்திகளை பரப்பி கொண்டு வருகின்றனர். அதனால் செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன்பாடு குறித்து நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

Tags :
|