Advertisement

அடுத்த சில போட்டிகளிலும் பிராவோ விளையாடுவது சந்தேகம்

By: Nagaraj Sun, 20 Sept 2020 4:49:53 PM

அடுத்த சில போட்டிகளிலும் பிராவோ விளையாடுவது சந்தேகம்

அடுத்த சில போட்டிகளிலும் பிராவோ விளையாடுவது சந்தேகம்தான் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா நேற்று அபுதாபியில் கோலாகலமாக தொடங்கியது. இதன் முதல் போட்டியில் மிகுந்த பலம் வாய்ந்த அணிகளான சென்னை - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னை அணியில் நட்சத்திர வீரர்களான ஹர்பஜன் சிங், ரெய்னா, பிராவோ ஆகியோர் இல்லை.

இருப்பினும் சிறப்பாக ஆடி மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஹர்பஜன் மற்றும் ரெய்னா தொடரில் இருந்தே விலகியவர்கள், ஆனால் பிராவோ ஏன் பங்குபெறவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஏனெனில் சமீபத்தில்தான் பிராவோ டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

stephen fleming,bravo,chennai team,doubt ,ஸ்டீபன் பிளெமிங், பிராவோ, சென்னை அணி, சந்தேகம்

இந்நிலையில், அவர் விளையாடததற்கான காரணம் தெரிய வந்ததுள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த சி.பி.எல் தொடரில் விளையாடிய பிராவோ, மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அந்த தொடரின் கடைசி போட்டியில் பங்கேற்கவில்லை. மேலும் அங்கிருந்து திரும்பிய பிராவோ பயிற்சியை மேற்கொண்டாலும் காயத்துடன் இருந்துள்ளார். அதனால் நேற்றைய போட்டியில் அவர் களம் இறங்கவில்லை.

மேலும் இத்தொடரின் அடுத்த சில போட்டிகளிலும் அவர் விளையாடுவது சந்தேகம்தான் என்று அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவருக்கு பதிலாக களமிறங்கிய இங்கிலாந்து அணியின் இளம் வீரரான சாம் கர்ரன் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டது மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்தினார் குறிப்பிடத்தக்கது.

Tags :
|