Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேலைவாய்ப்புகளை அளிக்க புலம்பெயர் தொழிலாளர் புள்ளிவிவரங்களை வைத்திருப்பது அவசியம்-வெங்கையா நாயுடு

வேலைவாய்ப்புகளை அளிக்க புலம்பெயர் தொழிலாளர் புள்ளிவிவரங்களை வைத்திருப்பது அவசியம்-வெங்கையா நாயுடு

By: Karunakaran Sun, 07 June 2020 3:07:59 PM

வேலைவாய்ப்புகளை அளிக்க புலம்பெயர் தொழிலாளர் புள்ளிவிவரங்களை வைத்திருப்பது அவசியம்-வெங்கையா நாயுடு

கொரோனாவை ஒடுக்கும் வழிமுறைகள் குறித்து இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா வைரஸ் காரணமாக ஏழைகள், தினக்கூலி தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏழைகள், புலம்பெயர் தொழிலாளர்களின் துயரத்தை துடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த முறையான புள்ளி விவரங்களை வைத்திருப்பது அவசியம். அவை இருந்தால் தான் அவர்களுக்கு தொழில்திறன்களை கற்றுத்தந்து, அவரவர் இடங்களிலேயே வேலைவாய்ப்பை அளிக்க அரசாங்கத்தால் முடியும் என்று தெரிவித்துள்ளார்.

corona issue,venkaiah naidu,migrant workers,curfew ,கொரோனா பிரச்சினை,வெங்கையா நாயுடு,புலம்பெயர் தொழிலாளர்,ஊரடங்கு

மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா கொரோனா பிரச்சினையை கையாண்ட விதம் பாராட்டுக்கு உரியது. ஊரடங்கு இல்லாவிட்டால், உயிரிழப்பு பலமடங்கு அதிகரித்து இருக்கும் என்று நிபுணர்கள் கூறுவதாக தெரிவித்தார்.

இதுவரை கிடைத்த பலன்களை ஊரடங்கு தளர்வுகள் கெடுத்துவிடக்கூடாது எனவும், இனிவரும் வாரங்களில் மெத்தனம் கூடாது எனவும், கொரோனாவை ஒழிப்பதில் அரசுக்கும், மக்களுக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags :