Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடக மாநிலங்களவையில் கார்கே மற்றும் தேவேகவுடா இருந்தால் நல்லது - கே.எச்.முனியப்பா

கர்நாடக மாநிலங்களவையில் கார்கே மற்றும் தேவேகவுடா இருந்தால் நல்லது - கே.எச்.முனியப்பா

By: Monisha Thu, 04 June 2020 10:41:59 AM

கர்நாடக மாநிலங்களவையில் கார்கே மற்றும் தேவேகவுடா இருந்தால் நல்லது - கே.எச்.முனியப்பா

மாநிலங்களவை தேர்தல் குறித்து கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எச்.முனியப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வருகிற 19-ந் தேதி கர்நாடக மாநிலங்களவையில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எங்கள் கட்சி சார்பில் மல்லிகார்ஜுன கார்கே நிறுத்தப்பட்டால், அதற்கு யாராவது எதிர்ப்பு தெரிவிப்பார்களா?. அவர் தலித் சமூகங்களின் தலைவர்.

மேலும் ஜனதா தளம்(எஸ்) சார்பில் தேவேகவுடா நிறுத்தப்பட்டால், அவருக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும். அவர் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடி வரும் பெரிய தலைவர். நாட்டின் பிரதமராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அதனால் அவருக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தால் நன்றாக இருக்கும்.

kh muniyappa,karnataka states,mallikarjuna carke,deve gowda ,கே.எச்.முனியப்பா,கர்நாடக மாநிலங்களவை,மல்லிகார்ஜுன கார்கே,தேவேகவுடா

மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் காங்கிரஸ் மேலிடத்தின் முடிவே இறுதியானது. சித்தராமையாவோ அல்லது டி.கே.சிவக்குமாரோ வெவ்வேறு தலைவர்கள் கிடையாது. இருவரும் சேர்ந்தே முடிவு எடுக்க வேண்டும்.

கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களுக்கு டிக்கெட் வழங்கினால், மக்கள் குறை கூறுவார்கள். மாநிலங்களவையில் கார்கே மற்றும் தேவேகவுடா இருந்தால் அது கர்நாடகத்திற்கு நல்லது. இதற்கு எங்கள் கட்சி மேலிடம் அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :