Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தடுப்பூசியை போட்டுக்கொள்வது எனது தார்மீக கடமை - ஆன்டனியோ குட்டரெஸ்

தடுப்பூசியை போட்டுக்கொள்வது எனது தார்மீக கடமை - ஆன்டனியோ குட்டரெஸ்

By: Karunakaran Fri, 11 Dec 2020 1:21:27 PM

தடுப்பூசியை போட்டுக்கொள்வது எனது தார்மீக கடமை - ஆன்டனியோ குட்டரெஸ்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமைச்செயலகத்தில் ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், நேற்று முன்தினம் பேட்டி அளிக்கையில், கொரோனா தடுப்பூசி உங்களுக்கு கிடைக்கும்போது அதை பகிரங்கமாக செலுத்திக்கொள்வீர்களா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “நிச்சயமாக. தடுப்பூசி எனக்கு கிடைக்கிறபோது, அதை நான் பகிரங்கமாக பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளேன். பகிரங்கமாக என்று சொல்வதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என பதில் அளித்தார்.

moral duty,corona vaccine,antonio guterres,un ,அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமைச்செயலகத்தில் ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், நேற்று முன்தினம் பேட்டி அளிக்கையில், கொரோனா தடுப்பூசி உங்களுக்கு கிடைக்கும்போது அதை பகிரங்கமாக செலுத்திக்கொள்வீர்களா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “நிச்சயமாக. தடுப்பூசி எனக்கு கிடைக்கிறபோது, அதை நான் பகிரங்கமாக பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளேன். பகிரங்கமாக என்று சொல்வதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என பதில் அளித்தார்.

மேலும் அவர், தடுப்பூசியை அணுகக்கூடிய அனைவரையும் போட்டுக்கொள்ளுமாறு நான் ஊக்குவிக்கிறேன். ஏனென்றால் இது ஒரு சேவை ஆகும். நாம் நமக்கு வழங்குவது மட்டுமல்ல. நாம் ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது முழு சமூகத்துக்கும் ஒரு சேவையை வழங்குகிறது என்று ஆன்டனியோ குட்டரெஸ் கூறினார்.

மேலும் அவர், ஏனென்றால், நாம் தொற்றுநோயை இனி பரப்புவது இல்லை. நோய் பரவும் ஆபத்தும் இல்லை. எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வது என்பது நம் அனைவருக்கும் தார்மீக கடமை ஆகும். தடுப்பூசி உலகளாவிய பொது நன்மைக்காக எல்லா இடங்களிலும் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளிலும் கிடைக்க வேண்டும் என கூறினார்.

Tags :