Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற இது அவசியம்

50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற இது அவசியம்

By: vaithegi Tue, 23 May 2023 12:34:40 PM

50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற இது அவசியம்

சென்னை: 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற பான் கார்டு அவசியம் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளிப்பு ....

2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30க்கு பிறகு பொதுமக்கள் புழக்கத்திற்கு பயன்படாது என்றும், அதற்குள் வங்கிகளில் அதனை மாற்றி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

2000 rupee note,rbi , 2000 ரூபாய் நோட்டு,ரிசர்வ் வங்கி

இதனை அடுத்து அதன்படி, ஆவணங்கள் இன்றி 20 ஆயிரம் ரூபாய் வரையில் 10*2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்.

இதற்கு அடுத்ததாக, 50 ஆயிரம் ரூபாய் வரையில் பெயர் , முகவரி, தொலைபேசி எண் (அந்தந்த வங்கிகளின் விதிகளின்படி) கொடுத்து மாற்றி கொள்ளலாம்.

மேலும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு பான் எண் கட்டாயம் எனவும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்து உள்ளது.


Tags :