Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகள் திறப்பது சாத்தியமே இல்லை; அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

பள்ளிகள் திறப்பது சாத்தியமே இல்லை; அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

By: Nagaraj Wed, 14 Oct 2020 10:16:24 PM

பள்ளிகள் திறப்பது சாத்தியமே இல்லை; அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப் போவது இல்லை என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கிட்ட்த்தட்ட 8 மாத்ங்க்ளுக்கும் மேலாக பள்ளிகள் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ளன. தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் அடிப்படையில் ஆந்திரா போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதில் சில மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

schools,corona distribution,minister,tamil nadu ,பள்ளிகள், கொரோனா பரவல், அமைச்சர், தமிழகம்

இன்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தர். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் எனக் கேள்விகள் எழுப்பினார்கள். அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

அமைச்சர் தனது பதிலில், 'தற்போது பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். ஆந்திராவில் பள்ளிகளை மீண்டும் திறந்ததால் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே மீண்டும் திறப்பது என்பது தற்போதைக்கு இல்லை.' என தெரிவித்துள்ளார்.

Tags :