Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அறிகுறிகளற்ற கொரோனா மற்றவர்களுக்கு பரவுவது என்பது அரிதினும் அரிது-உலக சுகாதார நிறுவனம்

அறிகுறிகளற்ற கொரோனா மற்றவர்களுக்கு பரவுவது என்பது அரிதினும் அரிது-உலக சுகாதார நிறுவனம்

By: Karunakaran Wed, 10 June 2020 2:20:07 PM

அறிகுறிகளற்ற கொரோனா மற்றவர்களுக்கு பரவுவது என்பது அரிதினும் அரிது-உலக சுகாதார நிறுவனம்

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவில் தான் தோன்றியது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிப்பு அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 10 நாட்களில், 9 நாட்கள் தினமும் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலில் 75 சதவீதம், அமெரிக்கா மற்றும் ஆசியாவின் 10 நாடுகளில் உள்ளவர் ஆவர்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம் பேட்டி அளித்தபோது, இப்போது சமீப காலமாக நாம் அடிக்கடி கேள்விப்படுகிற ஒன்றாக ‘அறிகுறிகளற்ற கொரோனா’ அமைந்துள்ளது. இந்த அறிகுறிகளற்ற கொரோனா பலருக்கும் இருக்கிறது. இந்த அறிகுறிகளற்ற கொரோனாவால் ஆபத்து இல்லை. காரணம், இது மற்றவர்களுக்கு பரவுவது என்பது அரிதினும் அரிது என்ற தகவலை உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய் மருத்துவ நிபுணர் மரியாவான்கெர்கோவ் தெரிவித்துள்ளதாக கூறினார்.

world health organization,coronavirus,asymptomatic  corona,world ,உலக சுகாதார நிறுவனம்,அறிகுறிகளற்ற கொரோனா ,

கடந்த வாரம் சீனா உகான் நகரில், 90 லட்சத்து 98 ஆயிரம் பேருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று உடைய நபர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் வெறும் 300 பேர் மட்டுமே. அறிகுறிகள் இல்லாமல் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களுடைய டூத்பிரஷ், மக்கு, முக கவசம், டவல் போன்ற தனிப்பட்ட உடைமைகளை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவற்றில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

அறிகுறிகள் இல்லாத இந்த 300 கொரோனா நோயாளிகளுடன்நெருங்கிய தொடர்பில் இருந்து வந்த 1,174 பேரை பரிசோதனை செய்தபோது, அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று தாக்கம் இல்லை என தெரிய வந்துள்ளது. இவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதில்லை என்பது தொடர்பு தடம் அறிந்த நாடுகளின் தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

Tags :