Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகளிர் உரிமைத் தொகை திட்ட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்

மகளிர் உரிமைத் தொகை திட்ட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்

By: vaithegi Fri, 06 Oct 2023 10:22:06 AM

மகளிர் உரிமைத் தொகை திட்ட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளையொட்டி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்கீழ் 1.06 லட்சம் பயனாளிகள் பலனடைந்தனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இ சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

appeal,womens right amount ,மேல்முறையீடு ,மகளிர் உரிமைத் தொகை

இச்சூழலில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்து. தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்திருந்தது.

இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 நாட்கள் அவகாசம் வழங்கிய நிலையில், தற்போது வரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்து உள்ளனர்.

Tags :
|