Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரேஷன் கடைகளின் வாயிலாக புதிதாக மற்றொரு ரேஷன் பொருள் விற்பனை செய்யவுள்ளதாக தகவல்

ரேஷன் கடைகளின் வாயிலாக புதிதாக மற்றொரு ரேஷன் பொருள் விற்பனை செய்யவுள்ளதாக தகவல்

By: vaithegi Sun, 01 Oct 2023 2:03:29 PM

ரேஷன் கடைகளின் வாயிலாக புதிதாக மற்றொரு ரேஷன் பொருள் விற்பனை செய்யவுள்ளதாக தகவல்

சென்னை: ரேஷன் கடைகளில் இனி நீலகிரி மாவட்டத்தில் விளையும் டீ தூள் விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல் ... தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட ஏகப்பட்ட ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் என்னென்ன பரிசு பொருட்கள் வழங்கப்படும் என ரேஷன் கார்டுதாரர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

ration goods,sale,ration shop , ரேஷன் பொருள், விற்பனை ,ரேஷன் கடை


இந்த நிலையில், ரேஷன் கடைகளின் வாயிலாக புதிதாக மற்றொரு ரேஷன் பொருள் விற்பனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக ரேஷன் கடைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் தேயிலை தூள் விற்பனை செய்ய இருப்பதாக அரசு அறிவித்து உள்ளது.

எனவே இதற்கான நடவடிக்கை மேற்கொண்டு ஓரிரு மாதங்களில் ரேஷன் கடைகளில் தேயிலை தூள் விற்பனை துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தேயிலைக்கு பெயர் போன நீலகிரியில் விளையும் டீ தூள் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய இருப்பதால் பொதுமக்கள் குஷியாகியுள்ளனர்.

Tags :
|