Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்லவுள்ளதாக தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்லவுள்ளதாக தகவல்

By: vaithegi Wed, 14 June 2023 10:10:00 AM

அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்லவுள்ளதாக தகவல்

சென்னை: அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்படுகையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி காரணமாக, தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை பற்றி அறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓமந்தூரார் மருத்துவமனை செல்லவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாக உ ள்ளது. சென்னை தலைமைச் செயலகம் செல்லும் முன்பு சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

minister senthil balaji,chief minister ,அமைச்சர் செந்தில் பாலாஜி,முதல்வர்

ஓமந்தூரார் மருத்துவமனையின் 6-வது மாடியிலுள்ள ICU-வில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று காலை முதல்வர் நேரில் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் இடையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது இதயத்துடிப்பு , உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Tags :