Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 20-ம் தேதிக்கு பிறகு லண்டன் செல்ல இருப்பதாக தகவல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 20-ம் தேதிக்கு பிறகு லண்டன் செல்ல இருப்பதாக தகவல்

By: vaithegi Sun, 23 Apr 2023 3:43:32 PM

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 20-ம் தேதிக்கு பிறகு லண்டன் செல்ல இருப்பதாக தகவல்

சென்னை : வருகிற மே-20ம் தேதிக்கு பிறகு லண்டன் செல்லும் முதல்வர் .... சென்னை தலைமை செயலயகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற மே 2-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது இதையடுத்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அமைச்சர்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் இந்த வெளிநாட்டு பயணம் பற்றியும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

london,prime minister,travel ,லண்டன் ,முதலமைச்சர் ,பயணம்

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 20-ம் தேதிக்கு பிறகு லண்டன் செல்ல இருப்பதாக தகவல் ஒன்று தெரிவிக்கின்றன. இப்பயணம் 1 வார கால பயணமாக இருக்கும் எனவும், ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.

மேலும் முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் , தொழில் முதலீடுகளை ஈப்பது தொடர்பாக தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை அவர் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. வருகிற மே 2-ம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|