Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க உள்ளதாக தகவல்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க உள்ளதாக தகவல்

By: Nagaraj Fri, 30 June 2023 11:10:32 PM

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க உள்ளதாக தகவல்

பெய்ஜிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு இந்தியா, ரஷ்யா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவராக இந்தியா உள்ளது.

இந்தியா தலைமை வகிக்கும் நிலையில், இந்த கூட்டமைப்பின் அமைச்சர்கள் அளவிலான மாநாடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சர்களின் மாநாடு நடைபெறுகிறது.

chinese president,conference,india,president,shanghai, ,இந்தியா, சீன அதிபர், தலைமை, மாநாடு, ஷாங்காய்

இதில் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தலைவர்கள் மாநாடு வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதில், இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார். இந்தியா அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் சீன அதிபர் ஒருவர் பங்கேற்பது இதுவே முதல் முறை.

2020-ம் ஆண்டு கால்வான் மோதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|