Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்

By: Nagaraj Fri, 28 Apr 2023 5:40:19 PM

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்

சென்னை: 5 நாட்களுக்கு கனமழை... தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளதாவது: தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

heavy rains,nilgiris,erode,coimbatore,dindigul,theni ,கனமழை, நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி

இதன் காரணமாக, ஏப்ரல் 28 முதல் மே.2 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Tags :
|