Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடன் தொல்லையால் ஆய்வாளர் சபரிநாத் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்

கடன் தொல்லையால் ஆய்வாளர் சபரிநாத் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்

By: Nagaraj Sat, 11 Mar 2023 10:32:18 AM

கடன் தொல்லையால் ஆய்வாளர் சபரிநாத் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கடன் தொல்லையால் கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் பயன்படுத்தி ஆய்வாளர் சபரிநாத் மற்றும் சாந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொள்ளாச்சி அருகே நல்லூர் எம்.எம். ஜி. நகரில் ஆய்வாளர் சபரிநாத் மற்றும் அவரது மகன், மனைவிபிரியா (என்கிற) ராஜேஸ்வரியுன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்,கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது மனைவி கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென மரணம் அடைந்துள்ளார்.

தன் மனைவி மருத்துவமனை செலவிற்காக ஆய்வாளர் சபரிநாத் வெளிவட்டாரங்களில் ரூபாய் மூன்று கோடி கடன் வாங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் தனது மனைவி இறந்து மூன்றாம் ஆண்டு நினைவு நாள் மார்ச் எட்டாம் தேதி என்பதால் சபரி தனது சகோதரி வீட்டுக்கு உடுமலை சென்று தன் மனைவி படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தன் மனைவி வாழ்ந்த வீட்டிற்கு தான் செல்ல வேண்டும் என சகோதரியிடம் தெரிவித்துள்ளார்.

அப்பொழுது சபரிநாத்துக்கு காய்ச்சல் இருந்ததால் சகோதரி சபரிநாத்தை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். தன் சகோதரி வீட்டில் இருக்குமாறு சபரிநாத்துக்கு அறிவுறுத்தியுள்ளார் ஆனால் சபரிநாத் பொள்ளாச்சியில் தன் மனைவி வாழ்ந்த வீட்டிற்குச் சென்று வீட்டை சுத்தம் செய்து சாமி கும்பிட வேண்டும் என தன் தெரிவித்து விட்டு பொள்ளாச்சி வந்துள்ளார்.

sabrinath,suicide,medical expenses,debt burden,localities ,சபரிநாத், தற்கொலை, மருத்துவச்செலவு, கடன் தொல்லை, வட்டாரங்கள்


இதை அடுத்து சபரிநாத் வீட்டில் இருந்தபொழுது தன் சகோதரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பத்திரமாக பொள்ளாச்சி வந்து விட்டதாகவும் சாமி கும்பிட்டு ஹோட்டல் செல்ல உள்ளதாகவும் சாமி கும்பிடும் பொழுது செலவு செய்த தொகை மற்றும் சகோதரிக்கு ரூபாய் 24 ஆயிரம் பணம் பரிமாற்றம் செய்து விடுவதாக தொலைபேசியில் தெரிவித்துள்ளார் ஆய்வாளர் சபரிநாத்.

கீழ் வீட்டில் இருந்த சாந்தி மேலே குடியிருக்கும் சபரிநாத் இருக்கும் இடத்திற்கு சென்றதாக தெரிய வருகிறது. ஜன்னல்கள் அடைக்கப்பட்ட நிலையில் ஆய்வாளர் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோல் இருவரும் உடம்பில் ஊற்றியுள்ளனர், பின் அருகில் இருந்த கேஸ் திறந்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் அருகில் இருந்த பிரிட்ஜும் வெடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து இருவரும் உடல்களும் கோவை அரசு மருத்துவமனையில் பிரத பரி சோதனை செய்யப்பட்டு ஆய்வாளர் உடல் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவு பேரில் ஆயுதப்படை போலீசார் பொள்ளாச்சி மின் மயானத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீசார் மரியாதை செலுத்தினர். சாந்தியின் உடல் ஆனைமலை மின் மயானத்தில் எரியூட்டபட்டது.

சபரிநாத்துக்கு தன் மனைவி மருத்துவ செலவுக்காக மூன்று கோடி கடன் வாங்கியதை திரும்ப செலுத்த முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

Tags :