Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளதாக தகவல்

ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளதாக தகவல்

By: vaithegi Sun, 18 Dec 2022 6:16:31 PM

ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளதாக தகவல்

சென்னை: பாதயாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்கிறார் .... பாரத் ஜோடோ எனப்படும் இந்திய ஒற்றுமை என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா என பல மாநிலங்களை கடந்த தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று கொண்டு வருகிறது.

இதையடுத்து யாத்திரையின் 100-வது நாள் நிறைவு விழா ராஜஸ்தானின் தௌசா பகுதியில் நடைபெற்றது. இதை தொடர்ந்து அவர் ராஜஸ்தானில் தனது பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இவரது பாதயாத்திரை வெற்றியடைய பல எதிர்க்கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

kamal haasan,pathayatra,rahul gandhi ,கமல்ஹாசன் , பாதயாத்திரை,ராகுல் காந்தி

இதேபோன்று சில கட்சி தலைவர்கள் இவரது பாதயாத்திரையில் பங்கேற்றும் வருகின்றனர். இந்த நிலையில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

டெல்லியில் வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags :