Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்

By: vaithegi Mon, 27 Feb 2023 4:49:56 PM

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றது முதற்கொண்டு விளையாட்டு துறையை மேம்படுத்து வகையில் பல நடவடிக்கைகள் ஈடுபட்டு கொண்டு வருகிறார்.

prime minister modi,minister udayanidhi stalin , பிரதமர் மோடி,அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இதனை அடுத்து பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல விழாவில் கலந்து கொள்கிறார்.

அதன் பின் நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகிவுள்ளது. மேலும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் மற்றும் கிரிராஜ் போன்றோரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாப்களின் அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :