Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 3.06 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்

நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 3.06 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்

By: vaithegi Tue, 28 Feb 2023 3:09:47 PM

நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 3.06 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்

சென்னை: தமிழக ரேஷன் கடைகள் வாயிலாக மக்கள் மாதந்தோறும் மானிய விலையில் அரிசி, பருப்பு , சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பெற்று கொண்டு வருகின்றனர். அதை தொடர்ந்து கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

மேலும் அதுமட்டுமல்ல தேர்தலில் போது வாக்குறுதி அளித்தபடி விரைவில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ration card,tamil govt , ரேஷன் கார்டு ,தமிழக அரசு

இந்நிலையில் ரேஷன் கார்டு பெற அதிக எண்ணிக்கையிலான மக்கள் முயற்சித்து கொண்டு வருகின்றனர். தற்போது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மிகவும் எளிதாகி விட்டது. உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாயிலாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்து எளிதில் பெறலாம்.

இதனால் நடப்பு நிதியாண்டில் மட்டும் அதாவது கடந்த 5-ம் தேதி நிலவரப்படி சுமார் 4. 88 லட்சம் பேர் ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்துள்ளனர் அதில் தகுதியுள்ள 3.6 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

Tags :