Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மோடி 15 உலக நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்

பிரதமர் மோடி 15 உலக நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்

By: vaithegi Fri, 08 Sept 2023 2:29:35 PM

பிரதமர் மோடி 15 உலக நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்

இந்தியா: இன்று பிரதமர் மோடி, மொரீசியஸ், வங்கதேசம், அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். வருகிற செப்.9 ஆம் தேதி (சனிக்கிழமை) ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கூடுதல் நிகழ்வாக அன்று இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.இதற்கு அடுத்த நாள் செப்.10 ஆம் தேதி பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுயேல் மேக்ரானை மதிய உணவு வேளையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மேலும் கோமோரோஸ், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், தென் கொரியா, ஐரோப்பிய யூனியன், பிரேசில் மற்றும் நைஜீரியா நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் மோடி கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ-வுடன் தனிப்பட்டமுறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

negotiations,prime minister modi,both sides ,பேச்சுவார்த்தை ,பிரதமர் மோடி,இருதரப்பு

அதனை அடுத்து ஜி20 அமைப்பின் 18-வதுஉச்சி மாநாடு, இந்தியா தலைமையில் டெல்லியில் நாளை தொடங்குகிறது. இதில் 30 நாடுகளுக்கும் மேற்பட்ட தலைவர்கள், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் அழைப்பு விடுக்கப்பட்ட விருந்தினர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 14 தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதற்கு இடையே, ஜி 20 உச்சி மாநாட்டினை முன்னிட்டு மாநாடு நடைபெறும் பகுதிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்கள் இருக்கும் பகுதிகளில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு உள்ளன.

Tags :