Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நவ.11-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தகவல்

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நவ.11-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தகவல்

By: vaithegi Fri, 28 Oct 2022 08:51:55 AM

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நவ.11-ம் தேதி பிரதமர் மோடி  தமிழகம் வருவதாக தகவல்

திண்டுக்கல்: நவ.11-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தகவல் ..... மதுரை 4 வழிச்சாலையில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி 35-வது பட்டமளிப்பு விழா நடந்தது.

இதனை அடுத்து அந்த விழாவில் அப்போதைய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாந்த் அவர்கள் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

அதன் பிறகு கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 3 ஆண்டுகளாக காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை.

prime minister modi,graduation ceremony ,பிரதமர் மோடி,பட்டமளிப்பு விழா

இதையடுத்து இந்த நிலையில் இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா நவம்பர் 11-ந்தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :