Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உயரும் வைரஸ் தொற்றுகள் .. தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்

உயரும் வைரஸ் தொற்றுகள் .. தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்

By: vaithegi Sat, 30 Sept 2023 3:41:32 PM

உயரும்  வைரஸ் தொற்றுகள்  .. தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்

சென்னை: சமீபகாலமாக டெங்கு மற்றும் நிபா வைரஸ் தொற்றுக்களின் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் ... தமிழகத்தில் கடந்த மாதம் முதல் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஒன்று, இரண்டு என இருந்த பரவல் எண்ணிக்கை தற்போது நூற்றுக்கணக்கில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

எனவே இதன் காரணமாக தமிழகம் முழுவதும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் தொற்றின் தாக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

controls,viral infections ,கட்டுப்பாடுகள் ,  வைரஸ் தொற்றுகள்

மேலும் கேரளா – தமிழகத்தின் எல்லை பகுதிகளின் வாயிலாக நிபா வைரஸ் தமிழகத்தை தாக்க கூடும் என்ற பதற்றம் நிலவி கொண்டு வருகிறது. இதன் காரணமாக எல்லைப் பகுதிகளில் நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே நிலையில் தொற்றுகள் பரவி வரும் பட்சத்தில் தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிய வருகிறது.

எனவே பொதுமக்கள் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான சுய நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஏதேனும் நோய் அறிகுறிகள் இருப்பின் அருகில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :