Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மீண்டும் வீட்டு வசதித் திட்டத்தைச் செயல்படுத்த விரும்புவதாக ‘சூப்பா்டெக்’ கட்டுமான நிறுவனம் தகவல்

மீண்டும் வீட்டு வசதித் திட்டத்தைச் செயல்படுத்த விரும்புவதாக ‘சூப்பா்டெக்’ கட்டுமான நிறுவனம் தகவல்

By: Nagaraj Sun, 04 Sept 2022 6:37:23 PM

மீண்டும் வீட்டு வசதித் திட்டத்தைச் செயல்படுத்த விரும்புவதாக  ‘சூப்பா்டெக்’ கட்டுமான நிறுவனம் தகவல்

நொய்டா: மீண்டும் வீட்டு வசதி திட்டத்திற்கு விருப்பம்... உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் இரட்டைக் கோபுர அடுக்குமாடி குடியிருப்புகள் தகா்க்கப்பட்ட இடத்தில் மீண்டும் வீட்டு வசதித் திட்டத்தைச் செயல்படுத்த விரும்புவதாகவும், இதற்காக நொய்டா மேம்பாட்டு ஆணையத்தை அணுகவிருப்பதாகவும் ‘சூப்பா்டெக்’ கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

குடியிருப்புகள் இடிப்பால் தங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, இந்நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்டதால், உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த 28-ஆம் தேதி இரட்டைக் கோபுர அடுக்குமாடி குடியிருப்புகள் தகா்க்கப்பட்டன.


சுமாா் 100 உயரமுள்ள இக்கட்டடங்கள், 3,700 கிலோ வெடிபொருள்களைப் பயன்படுத்தி, சில நொடிகளில் தரைமட்டமாக்கப்பட்டன. இந்நிலையில், அங்கு கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்ட பிறகு, புதிய வீட்டு வசதி திட்டத்தைச் செயல்படுத்த விரும்புவதாக சூப்பா்டெக் கட்டுமான நிறுவன தலைவா் ஆா்.கே.அரோரா தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:

நொய்டாவில் குழும வீட்டு வசதித் திட்டங்களுக்காக எங்கள் நிறுவனத்துக்கு 14 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில், 2 ஏக்கா் நிலத்தில் இரட்டைக் கோபுர அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன. அவை இடிக்கப்பட்டுவிட்ட நிலையில், அந்த 2 ஏக்கரில் புதிய வீட்டு வசதி திட்டத்தைச் செயல்படுத்த விரும்புகிறோம். இதற்காக நொய்டா மேம்பாட்டு ஆணையத்திடம் திட்டம் சமா்ப்பிக்கப்படும்.

Tags :
|
|