Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆப் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல்

பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆப் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல்

By: vaithegi Tue, 09 May 2023 4:04:23 PM

பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆப் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல்

சென்னை: தமிழகத்தில் 2022-23 ம் ஆண்டுக்கான 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை நேற்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இந்நிலையில் இந்தாண்டு 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மேலும் பல மாணவர்கள் கணிதம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.

ஆனால் கடந்தாண்டை விட இந்தாண்டு கணிதத்தில் மட்டும் சதம் எடுத்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஆனால் கடந்தாண்டை விட இந்த ஆண்டு 8,544 மாணவ-மாணவிகள் அதிகமாக 100க்கு 100 மதிப்பெண் எடுத்து உள்ளனர்.

engineering course,cut off ,பொறியியல் படிப்பு,கட் ஆப்

இதனை அடுத்து பல பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதில் கணித அறிவியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்கள் 200 மதிப்பெண்ணாக குறைக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொறியியல் தர வரிசை பட்டியல் எடுக்கப்படும்.

ஆனால் இந்தாண்டு கணித பாடத்தில் குறைவான மாணவர்கள் 100க்கு 100 பெற்றுள்ளதால் பொறியியல் கட் ஆப் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கணக்கு பதிவியல் மற்றும் வணிகவியல் பாடங்களில் சென்டம் வாங்கியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பி.காம் படிக்க அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Tags :